ரியாத் TNTJ வின் நஸீம் கிளையின் பயான் நிகழ்ச்சி கடந்த 10.08.2012 வெள்ளியன்று ஃபஜருக்கு முன்பாக சிறப்பாக நடைபெற்றது. நஸீம் கிளை சகோதரர்களின் ரமலான் மாத வேலை நேரத்தை அனுசரித்து, மஃக்ரிப் நேர நிகழ்ச்சிக்கு பதிலாக ஃபஜர் நேர நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் "பத்ர் போர்க்களத்தின் படிப்பினைகள்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். நிகழ்த்தப்பட்ட உரையிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பதிலளித்தவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மார்க்க விளக்க டிவிடிக்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்பு சஹர் உணவு பரிமாறப்பட்டது.
No comments:
Post a Comment