அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"இரமலானை பயன்படுத்திக் கொள்வோம்!" ரியாதில் - குடும்பத்தினருக்கான ரமலான் ஸ்பெஷல் நிகழ்ச்சி

ரியாதில் குடும்பத்தோடு தங்கியிருந்து பணிபுரியும் சகோதர-சகோதரிகளுக்காக TNTJ  ரியாத் மண்டலத்தின் சிறப்பு இரமலான் நிகழ்ச்சி கடந்த 03.08.2012 வெள்ளியன்று மாலை 5 மணிக்கு, சுலை பகுதியில் உள்ள அல்-அயில்யா இஸ்திராஹாவில், மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையிலும், மண்டல செயலாளர் சகோ. ஹாஜா, மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம்,  மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் ஆகியோர் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது.

ரியாத் மண்டலப் பேச்சாளர் சகோ. முஹம்மது யூனுஸ் “இரமலானை பயன்படுத்திக் கொள்வோம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  ஃபித்ரா மற்றும் நற்பணிகளுக்கான தர்மங்கள் குறித்து விளக்கப்பட்டது.

நிகழ்த்தப்பட்ட உரையிலிருந்து ஆண்கள்/பெண்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.  மண்டல நிர்வாகிகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தொண்டரணியினர் சிறப்புர களப்பணி ஆற்றினர். இந்நிகழ்ச்சியில் சுமார் 160 பேருக்கும் மேல் கலந்து கொண்டனர். சகோ. அல்தாஃபி அவர்கள் பேசிய  மார்க்க விளக்க டிவிடிக்களும், மேலும் “தேர்ந்தெடுக்கப்பட்ட ஹதீஸ்கள்” என்ற புத்தகமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

மஃக்ரிபுக்கு பிறகு அனைவருக்கும் இஃப்தார் விருந்து வழங்கப்பெற்றது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.