அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் டி.என்.டி.ஜே நடத்திய 12 வது இரத்த தான முகாம்


உம்ரா பயணிகளுக்கான சிறப்பு முகாம்
லக நாடுகளிலிருந்து ஹஜ் செய்வதற்காகவும், ரமலான் மாதத்தில் உம்ரா செய்வதற்காகவும் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் சவூதி அரேபியாவின் மக்கா நகருக்கு வருகை தருவது வழக்கம். அவர்களில் தேவைப்படுபவர்களுக்கு வழங்குவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் ஆண்டுதோறும் இரத்ததான முகாம் நடத்தி குருதிக் கொடையளித்து வருகின்றது.

அந்த வகையில் இன்னும் இரு வாரங்களில் வர இருக்கின்ற ரமலான் மாத உம்ரா பயணிகளுக்காக ரியாத் டி.என்.டி.ஜே இரத்த தான முகாமினை ஏற்பாடு செய்தது. இம்முகாமில் வழங்கப்படும் இரத்தம் உலக நாடுகளிலிருந்து சவூதி அரேபியாவின் மக்கா நகருக்கு வருகை தரும் பயணிகளில் தேவைப்படுபவர்களுக்கு வழங்குவதற்காக மக்காவுக்கு அனுப்பப்படுகிறது.

ரியாத் மாநகரிலுள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் கடந்த 15-07-2011 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற முகாமில் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள் என 120 பேர் குருதிக் கொடையளித்தனர். இது ரியாத் மண்டலம் நடத்தும் 12 ஆவது முகாம் ஆகும்.

இதே மருத்துவமனையில், ரியாத் டி.என்.டி.ஜே சார்பாக கடந்த 48 தினங்களுக்கு முன் நடைபெற்ற முகாமில் 230 பேர் இரத்ததானம் செய்திருந்தனர். மீண்டும் குருதிக் கொடையளிக்க குறைந்தது மூன்று மாத இடைவெளி தேவை. எனவே கடந்த முறை இரத்ததானம் செய்தவர்கள் எவரும் இம்முகாமில் பங்களிக்கவில்லை, இருப்பினும் அதிக அளவில் புதிய நபர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

இன்று 120 பேர் இரத்ததானம் செய்துள்ளதை கண்டு ஆச்சரியபட்ட மருத்துவமனையின் இரத்ததான வங்கி பொறுப்பாளர் டாக்டர். ஃபத்தூஹ் அல் ஆலம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சேவையை பாராட்டினார். அல்ஹம்துலில்லாஹ்!

காலை மற்றும் மதிய உணவு வேளைகளில் வந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. ரியாத் மண்டல நிர்வாகிகளின் சீரிய ஏற்பாட்டிலும், கிளை நிர்வாகிகள் தொண்டரணியினர் உறுப்பினர்களின் அயராத உழைப்பாலும், காலை 9.30 மணிக்கு துவங்கிய இம்முகாம் மாலை 4 மணி வரை நடைபெற்றது. பின்னர் மண்டல துணை தலைவர் பஷீர் மௌலவி அவர்களின் உரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

ஒரே முகாமில் அதிகமானோர் இரத்த தானம் செய்ததில், கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம் தொடர்ந்து சவூதி அரேபியாவில் முதலிடத்தில் இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

4 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!

    இன்ஷா அல்லாஹ் இந்த தளம் நமது சகோதரர்களுக்கு உபயோகமான தகவல்களை தர வேண்டுகிறேன்.

    சீறிய முறையில் செயல் பட பிரார்த்தித்தவனாக!

    ReplyDelete
  2. அபு ஃபைஜுல்Tuesday, July 26, 2011 12:09:00 PM

    அஸ்ஸலாமு அலைக்கு வரஹ்மதுல்லாஹி பரகாதஹூ
    உங்கள் பனி சிறக்க துஆ

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    நல்ல முயற்சி தொடருங்கள் இறையச்சத்தோடு

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    சொல் சரிபார்ப்பை நீக்கி விடவும்
    புதியவர்களுக்கு சிரமாக இருக்கும்

    ReplyDelete

Powered by Blogger.