கடந்த 16-03-2012 அன்று இரவு இஷா தொழுகைக்கு பின் பத்தாஹ் மர்கஸில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. மெளலவி.செய்யதலி ஃபைஸி அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்து தொகுப்புரையாற்றினார். அதை தொடர்ந்து பயிற்சி பேச்சாளராக சகோ.நைனா முஹம்மது அவர்கள் சிற்றுரையாற்றினார். பின்னர் மண்டல பேச்சாளரான சகோ.அன்சாரி அவர்கள் 'கடனும் அமானிதமே!' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். கடன்களால் இம்மை மறுமையில் ஏற்படும் விளைவுகளை அவர் தெளிவாக விளக்கினார்.
அடுத்ததாக கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு பின்னர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்ற பல சகோதரர்களின் வருகையை வரவேற்கும் விதமாக மெளலவி.செய்யதலி ஃபைஸி அவர்கள் சிற்றுரை நிகழ்த்தினார்.
இறுதியாக சகோ.முஹம்மது மாஹீன், ரியாத் மண்டல மற்றும் தலைமை செய்திகளை விளக்கி கூறினார். துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
No comments:
Post a Comment