கடந்த 08-03-2012 வியாழன் அன்று நஸீம் கிளையில் மாதாந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல வர்த்தக அணிச் செயலாளர் சகோ. புதுக்கோட்டை ஃபாரூக் தலைமை வகித்தார். மண்டல தஃவா அணிச் செயலாளர் சகோ. ஹாஜா, மண்டல தணிக்கையாளர் சகோ. ஷேக் அப்துல் காதர், கிளைச் செயலாளர் சகோ. அஷ்ரஃப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சகோ. அஷ்ரஃப் துவக்க உரை ஆற்றி கூட்டத்தை தொடக்கி வைத்தார். அதனை அடுத்து, மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் மௌலவி சையது அலி பைஜி அவர்கள் ”சுய மரியாதை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், நிகழ்ச்சியின் இறுதியாக, மண்டல தஃவா அணிச் செயலாளர் சகோ. ஹாஜா அவர்கள் மண்டல-மாநில செய்திகளை விளக்கினார். உம்ரா-கப்பல் பயணம் குறித்தும் விளக்கப்பட்டது. அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment