கடந்த 02-03-2012 அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின் ஃபெய்ஸலியா கிளையில் மாதாந்திர சொற்பொழிவு நடைபெற்றது. சகோ.அய்யூப் அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். அடுத்ததாக மண்டல பேச்சாளர் சகோ.முஹம்மது மாஹீன், ‘விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் திருக்குர்ஆன்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தலைசிறந்த கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்த விஞ்ஞானிகளில் ஏராளமானோர் திருக்குர்ஆனை படித்து விட்டு இஸ்லாத்தை ஏற்றதையும் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்பதை ஏற்றுக் கொண்டதையும் குறிப்பிட்ட அவர், விஞ்ஞானிகளின் ஆய்வுகள் அடிக்கடி மாறினாலும் குர்ஆனில் கூறப்பட்ட அறிவியல் உண்மைகள் என்றென்றும் மாறாமலும் முரண்படாமலும் இருப்பதே அதற்கு காரணம் என்று குறிப்பிட்டார். இறுதியாக ரியாத் மண்டலம் மேற்கொள்ளவிருக்கும் உம்ரா மற்றும் கப்பல் பயண செய்திகள் தெரிவிக்கப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
ஃபைஸலியா கிளை
கிளை நிகழ்ச்சி
"விஞ்ஞானிகளும் வியக்கும் திருக்குர்ஆன்" - ஃபெய்ஸலியா கிளையில் மாதாந்திர பயான் 02-03-2012
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment