நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
... நோயாளியை(ச் சந்தித்து) உடல் நலம் விசாரியுங்கள்! ... அறிவிப்பவர்: அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) புஹாரி 5649.
நோயாளிகளை
சந்தித்து உடல் நலம் விசாரித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளையும்
செய்வதற்காக ரியாத் மண்டலம் ஒரு குழுவினை அமைத்து செயல்பட்டு வருகின்றது.
மேலும், அவ்வாறு சந்திக்கையில், அவர்களுக்கு
தஃவா பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், குடும்பத்தை பிரிந்து
உழைக்கும் வேளையிலே, உடல் நலம் அல்லது விபத்தில் பாதிக்கப்பட்டு அவதிப்படும்
சகோதரர்களுக்கு ஆறுதலாக அமைவதற்காகவும், நபிகள் நாயகம் அவர்களின் சுன்னத்தை
பேணுவதற்காகவும், அதே நேரம் அழைப்புப் பணி செய்யும் முகமாகவும்
இந்த பணி செய்யப்பட்டு வருகின்றது.
கடந்த 25-02-2012 சனி அன்று இரவு 9 மணியளவில்
முர்ஸலாத்தில் உள்ள கிங்டம் மருத்துவமனையில் நோயாளியை சந்தித்து
ஆறுதல் கூறும் விதமாக ரியாத் TNTJ வின் தஃவா குழு சென்றது. அங்கு
கதிராமங்கலத்தைச் சேர்ந்த சகோ. அப்துல் அஜீஸ் என்பவர் இருதய
அறுவை சிகிச்சை செய்யப்பெற்று குணம் பெற்று வருகிறார். அவரை ரியாத் மண்டலம் சார்பாக
தஃவா அணி செயலாளர் சகோ. ஹாஜா, தொண்டர் அணி செயலாளர் சகோ. நூர் முஹம்மது, செயற்குழு
உறுப்பினர் அப்துரஹ்மான் (நவ்லக்) மற்றும் ஷாஜஹான் ஆகியோர் சென்று
சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இவருக்காக நமது மண்டலம் சார்பாக 6 யூனிட்டுகள் AB+ இரத்தம் ஏற்பாடு
செய்து தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த 01-03-2012 வியாழன் அன்று
மாலை 6 மணியளவில் சுமேஸி மருத்துவமனையில்
நோயாளியை சந்தித்து ஆறுதல் கூறும் விதமாக ரியாத் TNTJ வின் தஃவா குழு சென்றது. அங்கு
ஷிஃபா பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவர் வாகனத்தில் உள்ள பெட்ரோல் டேங்கை
மாற்றும் போது எதிர்பாராமல் வெளிச்சத்திற்காக உபயோயகப்படுத்திய மின் விளக்கு கை
தவறி விழுந்து உடைந்து தீ ஏற்பட்டு அவருடைய முகத்தில் சிறிதளவும் கைகளிலும் காலிலும் கடுமையான
தீக்காயம் ஏற்பட்டு, சிகிச்சை பெற்று
வருகிறார். அவரை ரியாத் மண்டலம் சார்பாக வர்த்தக அணி செயலாளர் சகோ. புதுக்கோட்டை பாருக், மருத்துவ அணி
செயலாளர் சகோ. மாஹீன் மற்றும் மண்டல துணைச் செயலாளர் சகோ. அக்பர் ஆகியோர் சென்று
ஆறுதல் கூறினார்கள்.
No comments:
Post a Comment