தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலத்தில் கடந்த 09-03-2012 அன்று உலக மகளிர் தின(!) விளக்க கூட்டம் நடைபெற்றது. பத்தாஹ் மர்கஸில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது மாஹீன், ‘உலக மகளிர் தினம் - ஓர் இஸ்லாமிய பார்வை’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். ‘பெண்கள் ஆடைகளை களைவதை மட்டுமே தனக்கு கிடைத்த சுதந்திரமாக கருத வேண்டும் என்ற நச்சு விதைகள் தூவப்பட்டு வருகின்றன. இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள சலுகைகளையும் உரிமைகளையும் போன்று எந்த மதத்திலும் எந்த நாட்டு சட்டத்திலும் வழங்கப்படவில்லை. கல்வி கற்பதில் உரிமை, பேச்சுரிமை, சொத்துரிமை, வழிபாட்டுரிமை, பொருளாதார உரிமை, சமூக உரிமை, சட்ட உரிமை, அரசியல் உரிமை, விவாகரத்து உரிமை என எல்லா உரிமைகளையும் வழங்கி பெண்களை இஸ்லாம் கண்ணியப்படுத்தி உள்ளது என்பதை உதாரணங்களுடன் அவர் எடுத்துக் காட்டினார்.
அதை தொடர்ந்து மௌலவி. செய்யதலி ஃபைஸி அவர்கள் ‘பெண்களுக்கு இஸ்லாம் வழங்கி இருக்கின்ற உரிமைகளை பெண்கள் படிக்க நேர்ந்தால் ஒட்டு மொத்த பெண்களும் இஸ்லாத்தை நோக்கி வந்துவிடுவர் என அஞ்சும் பிற மதவாதிகள் ‘இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது, கொடுமைப் படுத்துகிறது’ என்ற வறட்டு சொற்களை வீசி அதை தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றனர். இந்த சர்வதேச பெண்கள் தினத்தில் இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளை தெரிந்து கொள்வது ஒவ்வொரு பெண்ணின் மீதும் கடமை என்று அவர் குறிப்பிட்டார்.
அடுத்ததாக கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு பின் மண்டல துணை தலைவர் சகோ.நிஜாம் அவர்கள், ரியாத் மண்டலம் சார்பாக நடைபெற இருக்கும் உம்ரா மற்றும் கப்பல் பயண செய்திகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்.
No comments:
Post a Comment