அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் மண்டல தர்பியா நிகழ்ச்சி - 16.03.2012

ணையதளங்களிலும், மின்னஞ்சல்களிலும் தமிழ் மொழியின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. பெரும்பாலான தமிழ் இணையதளங்கள் “யுனிகோட்” என்ற தமிழ் ஒழுங்குரு அமைப்பில் இயங்கி வருகின்றன. கம்ப்யூட்டர்/மொபைல் – இன்டர்நெட் பயனாளர்களுக்கு இதனை கொண்டு சேர்க்கும் முகமாக, ஸ்பெஷல் தர்பியா முகாம் ரியாதில் 16.03.2012  வெள்ளியன்று  காலை  ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது.
பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதலாவதாக “ஜும்ஆ தின ஒழுங்குகள்” என்ற தலைப்பில் மண்டல தலைவர் ஃபெய்ஸல் சிற்றுரையாற்றினார். மேலதிக சிறப்பு விளக்கங்களுக்காக, மாநிலத் தலைவர் சகோ. பி.ஜெ. அவர்கள் பேசிய “ஜூம்ஆ தின ஒழுங்குகள்” என்ற பயான் புரஜக்டர் மூலம் ஒளிபரப்பப்பட்டது.

அடுத்த கட்டமாக, யூனிகோட் தமிழ் எழுத்துக்களை டைப் செய்யும் முறை, பயன்படுத்தும் முறை மற்றும் onlinepj.com, tntj.net இணையதளங்களை பார்க்கும் முறைகள், செய்திகளை தேடி எடுக்கும் முறை மற்றும் அவற்றில் உள்ள செய்திகள், வீடியோக்கள் முதலானவற்றை சகோ. ஃபெய்ஸல் புரஜக்டர் மூலம் விளக்கினார். மேலும், ஸ்மார்ட்ஃபோன் அலைபேசிகளில் மேற்கண்ட இணையதளங்களை, OperaMini மூலம் பார்க்கும் முறை முதலானவையும் விளக்கப்பட்டன. மேலும், தொலைதூர அழைப்புகளை இன்டர்நெட் மூலம் அலைபேசி வாயிலாக குறைந்த செலவில் பெறுவதற்கான விபரங்களும் அளிக்கப்பட்டன. ஜிமெயிலில் மின்னஞ்சல் கணக்கு திறப்பது மற்றும் அதனை திறமையான முறையில் கையாளுவது குறித்தும் திரையில் காண்பிக்கப்பட்டு விளக்கப்பட்டது.

மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத், ரியாத் மண்டலத்தின் இணையதளமான riyadhtntj.com –ஐ விளக்கினார். அதனை அடுத்து, அலைபேசிகளில், இன்டர்நெட் உபயோகப்படுத்துவதற்கான பல்வேறு மொபைல் கம்பெனிகளின் திட்டங்களையும், தொகைகள் குறித்தும் மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன் விளக்கினார்.
கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்று, விளக்கங்களும் அளிக்கப்பட்டன. ஜும்ஆ தொழுகைக்கு முன்பாக துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.