கடந்த 23.02.2012 வியாழன்று இரவு, ரியாதில் உள்ள கதீம் செனைய்யா
கிளையில் மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல்
தலைமை தாங்கினார். கிளைத் தலைவர் சகோ. நவ்ஷாத், மண்டல தஃவா அணி செயலாளர் சகோ.
ஹாஜா மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. சைய்யது அலி மவுலவி அவர்கள் "பிள்ளைகளுக்கு
பெற்றோர் மீதுள்ள கடமைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதிக அளவில் மக்கள்
கலந்து கொண்டனர். அனைவருக்கும், இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக
அவ்வாரத்தில், கேம்புகளுக்கு சென்று தஃவா பணியும் கதீம்
செனைய்யா நிர்வாகிகளால் செய்யப்பட்டது. TNTJ வின் பணிகளின் விளக்கங்கள், பயான்களுக்கான
அழைப்பு மற்றும் மார்க்க விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
No comments:
Post a Comment