தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு, ரியாதின் மாதாந்திர கூட்டம் கடந்த 16.03.2012 அன்று, மாலை 4.30 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் அதன் பொறுப்பாளர் சகோ.சாகுல் [அப்துல்] ஹமித் தலைமையில் துவங்கியது.
‘ஜும்ஆ தின ஒழுங்குகள்’ என்ற தலைப்பில் சகோ. ஃபரீத் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மாவட்டத்திலிருந்து வந்திருந்த செய்திகள் மற்றும் கடிதங்கள் வாசிக்கப்பட்டு மாவட்ட வளர்ச்சி குறித்து இக்கூட்டத்தில் பேசப்பட்டது. கூட்டமைப்பின் வலைத்தளத்தில் செய்திகளை உடனுக்குடன் வெளியிட ஆவண செய்யப்பட்டு மக்ரிப் தொழுகைக்கு முன்பு கூட்டம் துஆவுடன் நிறைவடைந்தது. இதில் மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment