அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"இஸ்லாத்தை பற்றி பிடிப்போம்" - நியூ செனையாவில் உள்ளரங்கு நிகழ்ச்சி 07-02-2012


ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளையில், GGC வில்லா பள்ளியில் கடந்த 07-02-2012 அன்று இஷா தொழுகைக்கு பின்னர் மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. நூர் அவர்கள் துவக்கவுரையாற்றினார். அடுத்ததாக மண்டல பேச்சாளர் சகோ.முஹம்மது மாஹீன், ‘இஸ்லாத்தை பற்றி பிடிப்போம்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதில் நபிமார்களிடமிருந்து வேதத்தை அறிந்ததும் அதை உறுதியாக பற்றி பிடித்த முன்கால முஸ்லிம்களையும் ஸஹாபாக்களையும் உதாரணமாக குறிப்பிட்ட அவர், மாற்று மதத்திலிருந்து இஸ்லாத்தை உணர்ந்து வந்தவர்கள் முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்தவர்களை விட இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதையும் சுட்டிக்காட்டி நாமும் இஸ்லாத்தை பற்றி பிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அடுத்ததாக மண்டல தஃவா அணி செயலாளர் சகோ. காஜா அவர்கள். மண்டல மற்றும் தலைமை செய்திகளை குறிப்பிட்டார்.  இறுதியாக மண்டலம் சார்பாக பிலிப்பைன்ஸ் மொழியிலான இஸ்லாமிய புத்தகங்கள் நியூ செனைய்யா கிளைக்கு தஃவா பணிக்காக விநியோகிக்க வேண்டி வழங்கப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.