ரியாத் மண்டல செயற்குழு கூட்டம் கடந்த 02.03.2012 வெள்ளியன்று காலை 8.30 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமை தாங்கினார். மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் மார்க்க விளக்க உரை நிகழ்த்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். “TNTJ வின் நம்பகத்தன்மை” என்ற தலைப்பில் ஆற்றிய உரை நிகழ்ச்சிக்கு பொருத்தமாக அமைந்தது.
மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன் (எ) அபு செயல்பாடுகளை விளக்கினார். மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம் அவர்கள் எதிர்கால திட்டங்களை விளக்கினார். இம்மாத இறுதியில் நடைபெற உள்ள உம்ரா நிகழ்ச்சி மற்றும் கப்பல் நிகழ்ச்சி குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டன. அனைத்து அணிச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களின் கருத்து பரிமாற்றத்திற்குப் பிறகு கூட்டம் துஆவுடன் நிறைவுற்றது.
No comments:
Post a Comment