அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் வாழ் கடையநல்லூர் TNTJ சகோதரர்களின் கூட்டம் - மார்ச் 2012

ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த 23-03-2012 வெள்ளியன்று மாலை  மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மர்கஸில் நடைபெற்ற இக்கூட்டத்திறகு ரியாத் மண்டல துணை செயலாளர் சகோ.நூருல் அமீன் தலைமை தாங்கினார்.

அடுத்ததாக ஏன் இந்த ஒருங்கிணைப்பு?” எனும் தலைப்பில் ரியாத் மண்டல மருத்துவ அணிச் செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன் சிறப்புரையாற்றினார். மூமின்கள் கட்டடத்தை போன்றவர்கள் என நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியை பற்றி பிடித்திருப்பது போல நாம் ஒருவருக்கொருவர் உதவி புரிய வேண்டும். அல்லாஹ்வுக்காக ஒருவரை வெறுப்பதும் அல்லாஹ்வுக்காக ஒருவரை நேசிப்பதும் இஸ்லாம் கூறும் நன்னெறியாகும். பிரிந்து கிடக்கும் கடையநல்லூர் சகோதரர்களை தவ்ஹீத் அடிப்படையில் ஒன்று சேர்ப்பது அவனுக்கு பிடித்தமான செயலாகும். கடையநல்லூர் மக்களுக்கு உதவிகளை செய்வதற்காகவும் தவ்ஹீத் கொள்கையை நிலைநிறுத்தவுமே இந்த ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெறுகின்றதுஎன்று அவர் குறிப்பிட்டார்.

அதை தொடர்ந்து, மண்டல நிர்வாகிகளின் முன்னிலையில் ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்திற்காக மூன்று புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இறுதியாக பொறுப்பாளர் சகோ. N.M.அப்துல் காதர் அவர்கள் பேசும் போது  ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்கள், இனி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆலோசனைப்படி ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். கடையநல்லூருக்கான நல உதவி திட்டங்களுக்கான ஆலோசனைகளுக்காக ஒவ்வொரு மாதமும் கூட்டங்கள் நடைபெறும். கடையநல்லூர் மக்களுக்காக உதவிகளை செய்ய விரும்புவோரும் கூட்டங்களில் கலந்து கொள்வோரும் கீழ்க்கண்ட பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளுமாறும் குறிப்பிட்டார்.  செயல்திட்டங்களுக்கான ஆலோசனைகளுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள்:
N.M.அப்துல் காதர் – 0501792945, S.S..ஜாஹிர் ஹுஸைன் – 0508774097, துராப்ஷா – 0532789676


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.