சமுதாய பணி - ரியாத் மண்டலம்.
மாநில தலைமை மூலம் 14-3-2015 அன்று கிடைக்கப்பெற்ற கடிதத்தின் அடிப்படையில், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த சகோதரி
ராஜேஸ்வரி அவர்கள் தனது கணவர் கணேசன் என்பவர் பிப்ரவரி மாதம் 2015 ல்,
ரியாதில் டிரைவர் வேலை என்று கூறி, ரியாதில் உள்ள ஒரு தமிழகத்தை சார்ந்த
நபர் தமிழ் நாட்டில் உள்ள ஒரு ஏஜென்ட் மூலம் இவரை அழைத்து வந்தார். ஆனால்
சொல்லப்பட்ட வேலை தராமல் ரியாதிலிருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் வீட்டு
வேலைக்கு அனுப்பி வைத்தனர்.
சகோதரர்
கணேசன் ஏற்கனவே சர்க்கரை நோயாளியாவர், இங்கு உள்ள தட்ப நிலை
சேராமல் பைல்ஸ் போன்ற வியாதிகளுக்கும் ஆளானார். மேலும் சொல்லப்பட்ட
வேலையும் சம்பளமும் தராததால் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளானார்.
இந்நிலையில்
இவர் தன்னை தாயகத்திற்கு திரும்ப அனுப்ப சொல்லிய காரணத்தினால், ரியாதில்
உள்ள தமிழக ஏஜென்ட் மூலம் கடுமையாக மிரட்டப்பட்டார். இந்த சூழ்நிலையில்
இவரது குடும்பத்தினர் நமது ஜமாஅத்தை அணுகி உதவுமாறு
கேட்டுக்கொண்டதற்கிணங்க, நமது ஜமாஅத்தின் மூலம் தொடர்பு கொண்டு இரு
தரப்பினரையும் சமரசம் செய்து ஏஜென்ட்டுக்கு ஏற்ப்பட்ட நஷ்டயீடில் ஒரு
தொகையை பேசி தாயகத்தில் சகோதரர் கணேசன் அவர்களின் குடும்பத்தினர் கொடுத்த
பின் நல்லபடியாக தாயகத்திற்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டார்.
சகோதரர் கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் TNTJ மாநிலம் மற்றும் ரியாத் மண்டலத்திற்கு நன்றியை தெரிவித்தனர்.
(புகைப்படம் எடுக்க முடியவில்லை)
No comments:
Post a Comment