“அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு கூட்டம்” – ரியாத் மண்டலம்
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான
கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை
அமைப்பான, அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு – சவூதி அரேபியாவின் மாதாந்திரக் கூட்டம் 10.04.2015 வெள்ளி அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு, ரியாத் TNTJ மர்கஸில், ச கோ.பரீத் தலைமையில்நடைபெற்றது.
ரியாத்
மண்டல செயலாளர் சகோ.யூனுஸ் மற்றும் ரியாத் மண்டல பொருளாளர் சகோ.தவ்பீக்
முன்னிலை வகித்தனர். கல்லூரி வளர்ச்சிக்கான செயல்திட்டங்களையும், கடந்த மாத செயல்பாடுகளையும் சகோ.சலாஹுதீன் விளக்கினார். தணிக்கை செய்யப்பட்ட கணக்கு விபரங்களை சகோ. கதிரை ஹாஜா சமர்ப்பித்தார்.
No comments:
Post a Comment