ரியாதில் பணிபுரியும் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ரமலான் விடுமுறையின் போது தம்மாமிற்கு காரில் சென்று திரும்பும் போது விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் ஒரு சிறுவன் பலியாகி விட்டான். இன்னொரு சிறுவன், ரியாதிலுள்ள தல்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றான். அவனது அறுவை சிகிச்சைக்காக அரிதான இரத்தப் பிரிவான O –Ve இரத்தம் தேவைப்படுவதாக ரியாத் மண்டலத்தை அவர்கள் அவர்கள் தொடர்பு கொண்டனர். உடனடியாக மண்டல மருத்துவ அணி செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன் மற்றும் மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ.அப்துல் ரஹ்மான் நவ்லக் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று சிறுவனை பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தனர். அன்றைய தினமே (27-08-12) ஒரு யூனிட் இரத்தம் தல்லா மருத்துவமனையில் வழங்கப்பட்டது. பின்னர் ரியாத் டி.என்.டி.ஜேயின் பரிந்துரையின் பேரில் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையிலிருந்து இரண்டு யூனிட் O –Ve இரத்தம் பெறப்பட்டு, அதை நிர்வாகிகள் தல்லா மருத்துவமனைக்கு எடுத்து சென்று வழங்கினர். நமது உதவியை கண்டு சிறுவனின் தந்தை நெகிழ்ச்சியுடன் ரியாத் TNTJ வுக்கு நன்றி கூறினார். மேலும், நமது அழைப்பு பணிகள், சமுதாய பணிகள் முதலானவை அவருக்கு விளக்கப்பட்டது. படத்தில் சிறுவனை நலம் விசாரிக்கும் சகோ. நவ்லக்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
அவசர இரத்ததான உதவி
மனிதநேயம்
ரியாத் மண்டலம்
ரியாத் மண்டலத்தின் அவசர இரத்த தான உதவி & குழு தஃவா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment