அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

"மனிதருள் புனிதர்" - ரியாத் மலஸ் கிளை சார்பாக ஆன்லைன் நிகழ்ச்சி

ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளையின் சார்பாக, சுமேசி அரேபியன் கல்ஃப் கேம்ப் பள்ளிவாயிலில் கடந்த 12.10.2012 வெள்ளியன்று மதியம் அஸருக்குப் பின் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல தணிக்கையாளர் சகோ, ஷேக் அப்துல் காதர் தலைமையிலும், கிளைத் தலைவர் சகோ. அலாவுதீன், கிளைச் செயலாளர் சகோ. ஹாஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தாயகத்திலிருந்து  மாநிலப்  பொதுச் செயலாளர் சகோ. கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள்  “மனிதருள் புனிதர்” என்ற தலைப்பில் ONLINEPJ.COM  இணையதளம் மூலம் சிறப்புரை ஆற்றினார். நாயகம் (ஸல்) அவர்களுக்கெதிரான சதி வேலை அவதூறு பிரச்சாரங்களை எவ்வாறு முறியடிப்பது, பிரச்சாரத்தை எவ்வகைகளில் முன்னெடுத்துச் செல்வது ஆகியவற்றை சிறப்புற விளக்கினார். முன்னதாக, மாநிலப் பேச்சாளர் ஒருவர்  “நபிகள் நாயகத்தின் பண்பு நலன்கள்” பற்றி உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் கடைசியாக கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோ. கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் பதிலளித்தார்.

மலஸ் கிளை சார்பாக, “"இரத்த தானம் செய்வீர்! இறையருளைப் பெறுவீர்!" துண்டுப்பிரசுரமும், "குர்பானியின் சட்டங்கள்" துண்டுப்பிரசுரமும் விநியோகம் செய்யப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.