அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் - குடும்பத்தினருக்கான ஸ்பெஷல் ரமலான் நிகழ்ச்சி 26-08-2011

ரியாதில் குடும்பத்தோடு தங்கியிருந்து பணிபுரியும் சகோதர-சகோதரிகளுக்காக TNTJ  ரியாத் மண்டலத்தின் சிறப்பு இரமலான் நிகழ்ச்சி கடந்த 26.08.2011 வெள்ளியன்று மாலை 4.30 மணிக்கு, ஷிஃபா பகுதியில் உள்ள அல்ஷக்ரா இஸ்திராஹாவில் சிறப்புற நடைபெற்றது.

ரியாத் மண்டலப் பேச்சாளர் சகோ. சையது அலி ஃபைஜி “இரமலானின் மாண்புகளும், ஃபித்ராவின் அவசியமும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதனையடுத்து ரியாத் மண்டலச் செயலாளர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், நிகழ்ச்சியின் அவசியம் குறித்தும், தொடர்ச்சியாக வரும் காலங்களில் இது போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது குறித்தும் விளக்கினார். 

நிகழ்த்தப்பட்ட உரையிலிருந்து ஆண்கள்/பெண்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.  மண்டல நிர்வாகிகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,ஷிஃபா கிளை தொண்டரணியினர் சிறப்புர களப்பணி ஆற்றினர். சுமார் 175 பேருக்கு மேல் கலந்து கொண்டனர். மஃக்ரிபுக்கு பிறகு அனைவருக்கும் இஃப்தார் விருந்து வழங்கப்பட்டது.







ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.