கடந்த செப்டம்பர் 22ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ரியாத் கூட்டமைப்பின்
பதிமூன்றாவது மாதந்திர ஆலோசனை கூட்டம், ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது,
இதில் மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் மௌலவி சையது அலி ஃபைஜி அவர்கள்
“நபிகளாரின் இறுதி வாழ்கையும், அவர்களின் தொழுகையும்” என்ற தலைப்பில்
சிறப்புரையாற்றினார், அதனைத் தொடர்ந்து கூட்டமைப்பின் பொறுப்பாளர்களில்
ஒருவரான சகோ. ஃபாரூக் கடந்த ஒரு வருட காலத்தில் கூட்டமைப்பின் செயல்பாடுகள்
பற்றியும், வரவு செலவு கணக்குகளும் உறுப்பினர்களுக்கு வாசித்தார்.
மேலும் மாவட்டத்தில் மார்க்க பிரச்சாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தூய
இஸ்லாத்தை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு
துஆவுடன் கூட்டம் முடிவுற்றது. இன்ஷா அல்லாஹ் அடுத்த கூட்டத்தில்
மாநிலத்தலைமையின் புதிய முடிவுகளின்படி மாவட்ட கூட்டமைப்பின் மூன்று
பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு
ரியாத் - புதுக்கோட்டை மாவட்ட ரியாத் கூட்டமைப்பின் கூட்டம் 22-09-2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment