அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் மண்டல பொதுக்குழுக் கூட்டம் 16-09-2011


ல்லாஹ்வின் அளப்பெருங்கிருபையால் ரியாத் மண்டல பொதுக்குழு கூட்டம் கடந்த 16.09.2011  வெள்ளியன்று காலை 9.30 மணிக்கு ரியாத் பத்தாஹ் கிளாஸிக் ரெஸ்டாரண்ட் ஹாலில் நடைபெற்றது.

தம்மாம் மண்டல நிர்வாகியான சகோ. தவ்ஃபீக் அவர்கள் மேலிட பார்வையாளராக கலந்து கொண்டு தலைமை வகித்தார். மண்டல செயலாளர் சகோ. ஃபெய்ஸல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மண்டல இணைச் செயலாளர் சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக் வரவேற்புரை ஆற்றினார். அதனை அடுத்து, மண்டலப் பேச்சாளர் சகோ. சையது அலி மவுலவி அவர்கள் துவக்கவுரை ஆற்றினார்.

மண்டல செயலாளர் ஃபெய்ஸல் கடந்த 3 வருட செயல்பாடுகளை பட்டியலிட்டார். மண்டல பொருளாளர் சகோ. நூருல் அமீன் தணிக்கைச் செய்யப்பட்ட கணக்குகளை வாசித்தார். அதனைத் தொடர்ந்து ரியாத் மண்டலத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கீழ்க்கண்ட சகோதரர்கள் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

சகோ. தவ்ஃபீக் (தம்மாம்) சிறப்பான முறையில் நிர்வாகிகள் தேர்வினை நடத்தினார். மண்டல துணைத் தலைவர் சகோ. பஷீர் மவுலவி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

ஜூம்ஆவுக்கு பிறகு கிளைகள் குறை கேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல நிர்வாகிகள் பதிலளித்தனர். பொதுக்குழு உறுப்பினர்களிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டன. கிளைகளுக்கான செயல்பாடுகளை அதிகரிக்கும் முகமாக மண்டல நிர்வாகிகள் ஆலோசனைகளை வழங்கினர்.

மண்டல பேச்சாளர் சகோ, அப்துல்லாஹ் மவுலவி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். அனைவருக்கும் சிறப்பு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. சவூதியில் பணிபுரியும் இந்தியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை களைவதில் பிறநாட்டு தூதரகங்களை விட இந்திய தூதரகத்தின் செயல்பாடுகள் மிக குறைவாகவே உள்ளன. எனவே இந்திய தூதரகத்தின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கான முழு உரிமையையும் இந்திய தூதரகங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

2. பெருந்தொகை செலவழித்து சவூதிக்கு வரும் இந்தியர்களை ஓடிவிட்டதாக கூறி "ஹூரூஃப்" எனும் குற்றத்தில் சேர்த்து விடுகின்றனர். இதன் மூலம் பணிபுரிய இயலாமலும் ஊருக்கு செல்ல இயலாமலும் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே பாதிக்கப்பட்டவர்களின் இன்னலை போக்கி அவர்களுக்கு வாழ்வளிக்கும் திட்டத்தை அறிவிக்க வேண்டுமென சவூதி அரசுக்கு இப்பொதுக்குழு வேண்டுகோள் விடுக்கின்றது.

3. சவூதி அரேபியர்கள் முஸ்லிம்கள் என்பதால் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சவூதி அரசை பற்றியும், அரேபிய மக்களைப் பற்றியும் அடிக்கடி பொய் செய்திகளையும் அவதூறுகளையும் எழுதி வரும் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கின்றது.

4. கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி அவர்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டுமென இப்பொதுக்குழு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.

5. தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு அதிகப்படுத்தப்பட வேண்டுமென்றும் அவை சரிவர நடைமுறை படுத்தப்படுகிறதா என்பவை கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் இப்பொதுக்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.





ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.