ரியாத் மண்டலத்தின் ஷிஃபா கிளையின் உள்ளரங்கு நிகழ்ச்சி கடந்த 06.07.2012 வெள்ளியன்று மதியம் ஷிஃபா செனைய்யா பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. ஜஹாங்கீர் தலைமையிலும், கிளைச் செயலாளர் சகோ. ஜியாவுதீன் மற்றும் மண்டல அணிச் செயலாளர் சகோ. மோமீன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல பேச்சாளர் சகோ. இக்பால் மவுலவி அவர்கள் "நோன்பின் சட்டங்கள்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். உணர்வில் வெளிவந்த "சமையல் எரிவாயு சப்ளை இல்லையா?" மற்றும் "அரசின் இலவச விடுதியில் தங்கி படிக்க வேண்டுமா?" என்ற இரு கட்டுரைகளும் நோட்டீஸாக அடித்து விநியோகிக்கப்பட்டது. மேலும், புத்தகங்கள், டிவிடிக்கள் அன்பளிப்புகளாக வழங்கப்பட்டன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
ஷிஃபா கிளை
"நோன்பின் சட்டங்கள்" - ஷிஃபா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment