அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் மண்டல தர்பியா நிகழ்ச்சி - 29.06.2012

ணையதளங்களிலும், மின்னஞ்சல்களிலும் தமிழ் மொழியின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. பெரும்பாலான தமிழ் இணையதளங்கள் யுனிகோட்என்ற தமிழ் ஒழுங்குரு அமைப்பில் இயங்கி வருகின்றன. கம்ப்யூட்டர்/மொபைல் இன்டர்நெட் பயனாளர்களுக்கு இதனை கொண்டு சேர்க்கும் முகமாக, ஏற்கனவே நடந்த தர்பியாவின் தொடர்ச்சியாக மற்றொரு தர்பியா முகாம் ரியாதில் கடந்த 29.06.2012 வெள்ளியன்று  காலை  ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது.

பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதலாவதாக நோன்பின் சட்டங்கள் என்ற தலைப்பில் மண்டல தலைவர் ஃபெய்ஸல் விளக்கவுரை நிகழ்த்தினார். நோன்பு, இரவுத் தொழுகை முதலான விஷயங்களில் கேள்வி பதில் நிகழ்ச்சியும், கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அடுத்த கட்டமாக, onlinepj.com, tntj.net இணையதளங்களை பார்க்கும் முறைகள், செய்திகளை தேடி எடுக்கும் முறை மற்றும் அவற்றில் உள்ள செய்திகள், வீடியோக்கள் முதலானவற்றை பார்க்கும் முறை குறித்து சகோ. ஃபெய்ஸல் புரஜக்டர் மூலம் விளக்கினார். ஜிமெயில், ஃபேஸ்புக், யூடியூப் முதலானவற்றை  பாதுகாப்பான  முறையில்  பயன்படுத்துவது  குறித்தும்  விளக்கப்பட்டது.

மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் அவர்கள் ஸ்மார்ட்ஃபோன் அலைபேசிகளில் மேற்கண்ட இணையதளங்களை, Opera Mini மூலம் பார்க்கும் முறை உள்ளிட்டவற்றை விளக்கினார்.

கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்று, விளக்கங்களும் அளிக்கப்பட்டன. ஜும்ஆ தொழுகைக்கு முன்பாக துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.