அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் மண்டல செயற்குழு கூட்டம் – 06.07.2012


ரியாத் மண்டல செயற்குழுக் கூட்டம் கடந்த 06.07.2012 வெள்ளியன்று காலை 9.15 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.  மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமை தாங்கினார்.  மண்டல செயலாளர் சகோ. ஹாஜா, மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத், மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

“இரமலானில் நமது அமல்கள்”  என்ற தலைப்பில் சகோ. ஃபெய்ஸல் உரையாற்றினார்.

அதனை அடுத்து, மண்டல செயல்பாடுகளை சகோ. ஹாஜா விளக்கினார்.

எதிர்வரும் 13.07.2012 அன்று நடைபெற உள்ள ரியாத் மண்டலத்தின் 19 ஆவது இரத்த தான முகாம், இரமலானில் ஃபித்ரா பங்களிப்புகள், கிளைகளுக்கான ஆலோசனைகள், இஃப்தார் நிகழ்ச்சிகள், நோட்டீஸ் விநியோகம், தஃவா நிகழ்ச்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது. கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது. முன்னதாக ரியாத் மண்டல நிர்வாகக்குழு கூட்டுக் கூட்டம் காலை 6.30 மணிக்கு நடைபெற்றது.

ஜும்ஆ தொழுகைக்கு முன்னதாக கூட்டம் இனிதே முடிவுற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.