நியூ செனையா ஃபார்கோ கிளையில் கடந்த 18-07-2012 அன்று இரவு 9.00 மணிக்கு மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. நியூ செனைய்யா கிளைத் தலைவர் சகோ.நூர் அவர்கள் துவக்கவுரையாற்றினார். அடுத்ததாக மண்டலம் சார்பாக மண்டல பேச்சாளர் சகோ.முஹம்மது மாஹீன், ‘நோன்பு ஒரு பயிற்சிக் கூடம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ‘தனி அறையில் தேவையுடையவனாக இருந்தும் இறைவன் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் எனும் நோக்கில் தாகத்தையும் பசியையும் பொறுத்துக் கொள்ளும் ஒருவனுக்கு திருட்டு, ஆபாசம், பொய், புறம், மோசடி, அந்நியப் பொருட்களை அபகரித்தல் போன்றவற்றிலிருந்து விலகி இருப்பதற்கான பயிற்சியை நோன்பானது வழங்குகிறது’ என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார். இறுதியாக ரமலானில் வரும் உம்ரா பயணிகளுக்காக ரியாத் மண்டலம் நடத்திய இரத்தான முகாம் உட்பட மண்டல செய்திகளும், இந்த வருட ஃபித்ரா குறித்தும், எவ்வாறு விநியோகம் செய்வது போன்ற மாநில செய்திகளும் கூறப்பட்ட பின் கூட்டம் நிறைவுற்றது. முன்னதாக வருமுன் உரைத்த இஸ்லாம், மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள் அன்பளிப்பாக விநியோகிக்கப்பட்டன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
ஃபார்கோ கிளை
கிளை நிகழ்ச்சி
"நோன்பு ஒரு பயிற்சிக்கூடம்" - நியூ செனைய்யா ஃபார்கோ கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment