ரியாத் மண்டலத்தின் 18 ஆவது மாபெரும் இரத்த தான முகாம், நேற்று 13.04.2012 வெள்ளியன்று கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை இரத்த வங்கியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. காலை 9 மணிக்கு துவங்கிய இம்முகாம், மாலை 5 மணி வரை நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்துள்ளது என்பதை அறிந்ததும் தமிழர்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பெண்கள் உட்பட ஏராளமானோர் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். சிரியா, யெமன், பாகிஸ்தான், இலங்கை, சூடான் மற்றும் பங்களாதேஷ் நாட்டினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டது இம்முகாமுக்கு சிறப்பு சேர்ப்பதாக அமைந்தது. தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிமல்லாத சகோதரர்களும் இந்த முகாமில் கலந்து கொண்டது, TNTJ வின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பறை சாற்றுவதாக அமைந்தது.
சுமார் 275 பேர்களுக்கு மேல் கலந்து கொண்ட இம்முகாமில் 230 பேர் மட்டுமே இரத்த தானம் செய்ய முடிந்தது. ரியாத் மண்டலத்தின் மருத்துவ அணி செயலாளர்களுள் ஒருவரான சகோ. புதுக்கோட்டை ஃபாரூக் மற்றும் அப்துர்ரஹ்மான் நவ்லக் ஆகியோரின் ஏற்பாட்டிலும், மண்டல தலைமை நிர்வாகிகளின் மேற்பார்வையிலும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தொண்டரணிச் செயலாளர் சகோ. நூர் மற்றும் தஃவா அணிச் செயலாளர் சகோ. ஹாஜா ஆகியோர் தலைமையில் தொண்டரணியினர் சிறப்பாக களப்பணியாற்றினர். மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. ஹாஜா அலாவுதீன் மேற்பார்வையில், மண்டல - கிளை நிர்வாகிகள் தமது வாகனங்கள் மூலம் கொடையாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்து கொடையாளிகளை அழைத்து வருவது, அவர்களை ஒழுங்குபடுத்துவது, அவர்களுக்கு இரத்ததானத்திற்கான அடிப்படை தகவல்களை தெரிவிப்பது என அனைத்து பணிகளும் செவ்வனே செய்யப்படிருந்தன.
மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் அவர்கள் வடிவமைத்திருந்த இரத்த தான முகாம்களுக்கான மென்பொருள் (Software) கொடையாளிகளிடையே வரவேற்பினைப் பெற்றது. கொடையாளிகள் அனைவருக்கும் சிறப்பு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சவூதி நாட்டைச் சேர்ந்த இரத்த வங்கி மேற்பார்வையாளர் சகோ. அப்துல் மஜீத் TNTJ வுக்கு நன்றி கூறினார்.
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு “தேர்ந்தெடுக்கப்பட்ட 50 நபிமொழிகள்” புத்தககம் அன்பளிப்பாக விநியோகிக்கப்பட்டது.
No comments:
Post a Comment