திருச்சி அரியலூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற சகோதரர் கடந்த 14.04.2012 அன்று ரியாத் மண்டலத்தை தொடர்பு கொண்டு, தனக்கு அவசரமாக 4 யூனிட் இரத்தம் தேவைப்படுவதாக கூற, உடனடியாக மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக் மூலமாக துரிதத நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவருடைய உடல் நிலை மற்றும் மருத்துவமனை ஆவணங்களை சரிபார்த்து, கிங் ஃபஹத் மெடிகல் சிட்டி இரத்த வங்கி மூலமாக 4 யூனிட்டுகள் வழங்கப்பட்டது,
இவர் தம்மாமில் உள்ள அல் மர்கான் என்ற கம்பெனியில் கனரக வாகன ஓட்டியாக பணிபுரிபவர், அதிக வேலைப்பளு காரணமாக சரியாக ஓய்வெடுக்காமலும் அதிக ஓவர் டைம் செய்ததாலும் அவரது உடலில் இரத்தத்தின் அளவு மிகவும் குறைந்து விட்டது. ரியாத் TNTJ செய்த உதவியை தனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்று மனம் நிறைந்து கூறினார் சகோ. ராம கிருஷ்ணன்.
No comments:
Post a Comment