அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"ஏகத்துவப் பார்வையில் ஏப்ரல் ஃபூல்" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி 30-03-2012

ரியாத் மண்டல TNTJ மர்கஸில் கடந்த 30.03.2012 அன்று இஷா தொழுகைக்கு பின் பயிற்சி பேச்சாளர் சகோ. நெய்னா முஹம்மது "ஏகத்துவப் பார்வையில்  ஏப்ரல் ஃபூல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதைத் தொடர்ந்து ரியாத் மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. செய்யது அலி ஃபைஜி மௌலவி அவர்கள் "நன்றி செலுத்துவோம்” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இந் நிகழ்ச்சியில் உண்மை மார்க்கம் இஸ்லாத்திற்கு திரும்பிய தமிழக சகோதரர்கள் சுல்தான் மற்றும் அப்துல் ரஹ்மான் இருவருக்கும் மண்டல சார்பாக மார்க்க விளக்க குருந்தகடுகள் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது. இறுதியாக மண்டல துணைச் செயலாளர் நூருல் அமீன் மாநில மற்றும் மண்டலச் செய்திகளை எடுத்துரைத்தார். மேலும் எதிர் வரும் 13.04.2012 வெள்ளியன்று KFMC கிஃங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் 18 ஆவது இரத்த தான முகாம் ரியாத் TNTJ  நடத்த ஏற்பாடு செய்துள்ள விபரம் அறிவிக்கப்பட்டு துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.