கடந்த 14.04.2012 அன்று சீர்காழியை அடுத்துள்ள புத்தூரைச்
சேர்ந்த முஹம்மது ஜலீல் என்ற சகோதரர் ரியாதில் இறந்து விட்டதாக மண்டல செயலாளர் சகோ.
அரசூர் ஃபாரூக் அவர்களுக்கு தாயகத்தில் இருந்து போன் மூலம் தகவல் வந்தது. தக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டு ஜனஸா நல்லடக்கதிற்கான ஏற்பாடுகள் துரிதமாக செய்யப்பட்டன.
மரணித்தவரின் தங்கையின் கணவர் ரியாஸ் அவர்களுடன் இணைந்து, நல்லடக்கத்திற்கான
வேலைகளை மண்டல செயலாளர் அரசூர் ஃபாரூக் செய்து முடித்தார், 16.04.2012 அன்று எக்ஸிட் 15 அல்-ராஜி பள்ளியில்
அஸருக்கு பிறகு ஜனாஸா தொழுகை நடைபெற்று, நசீம்
மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் நண்பர்கள், உறவினர்கள் கலந்து
கொண்டனர்.
களப்பணி & தகவல்: அரசூர் ஃபாரூக்
No comments:
Post a Comment