அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"வழிகேடர்கள் யார்?" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி 06-04-2012


ரியாத் மண்டல TNTJ மர்கஸில் கடந்த 06.04.2012 அன்று உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ரியாத் மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. செய்யது அலி ஃபைஜி மெளலவி அவர்கள் “வழி கேடர்கள் யார்?” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். குர்ஆன், ஹதீஸிற்கு மாற்றமாக நடந்த மன்சூர் அல்லாஜ்,  இப்னு அரபி போன்றோர் எப்படி பட்டவர்கள், எந்த கொள்கையை போதித்தார்கள் என்பதை அவர்கள் எழுதிய நூல்களில் இருந்தே ஆதாரத்தோடு பேசி தவறாக போதிக்கப்பட்டு உருவாக்கப்படும் மதரஸா மாணவர்களின் நிலையை தெளிவாக எடுத்துரைத்தார்.

இறுதியாக மண்டல செயலாளர் அரசூர் ஃபாரூக் மாநில மற்றும் மண்டலச் செய்திகளை எடுத்துரைத்து, இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 13.04.2012 வெள்ளியன்று KFMC கிஃங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் 18 ஆவது இரத்த தான முகாம் ரியாத் TNTJ நடத்த ஏற்பாடு செய்துள்ள விபரம் அறிவிக்கப்பட்டு துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.