அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் மண்டல செயற்குழு கூட்டம் – 06.04.2012


ரியாத் மண்டல செயற்குழுக் கூட்டம் கடந்த 06.04.2012 வெள்ளியன்று காலை 9.15 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.  மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமை தாங்கினார்.  மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் மார்க்க விளக்க உரை நிகழ்த்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். “நன்மையின் பால் அழைப்போம்!” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

நடந்து முடிந்த உம்ரா-கப்பல் பயண நிகழ்ச்சி குறித்து சகோ. ஃபெய்ஸல் விளக்கினார். தாயகத்திலிருந்து விடுமுறை முடிந்து திரும்பிய மண்டல செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் அவர்கள், தாயகத்தில் TNTJ வின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். இன்ஷா அல்லாஹ், 13.04.2012 அன்று நடக்க உள்ள ரியாத் மண்டலத்தின் 18 ஆவது இரத்த தான முகாம் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றன.  மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் கணக்குகளை சமர்ப்பித்தார். ஜமாஅத்  பத்திரிகைகளின் சந்தாக்களை அதிகப்படுத்த ஆர்வமூட்டப்பட்டு, அனைத்து அணிச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்களின் கருத்து பரிமாற்றத்திற்குப் பிறகு கூட்டம் துஆவுடன் நிறைவுற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.