அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் கடந்த 20-04-2012 (வெள்ளி) அன்று காலை 9.30 மணிக்கு ரியாத் மண்டல TNTJ மர்கஸில் நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் மாதாந்திரக் கூட்டம், அதன் பொறுப்பாளர் சகோ. சாகுல் (அப்துல்) ஹமீது தலைமையிலும் துணை பொறுப்பாளர்கள் முன்னிலையிலும் துவங்கியது.
“நியாயத் தீர்ப்பு நாளை நம்புவது” என்ற தலைப்பில் சகோ.அரசூர் பாரூக் சிறப்புரையாற்றினார். அதைத்தொடர்ந்து மாவட்டத்திலிருந்து வந்திருந்த கடிதங்கள் வாசிக்கப்பட்டு மாவட்ட வளர்ச்சிக்கான செயல்பாடுகள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பகல் 11.45 மணிக்கு இக்கூட்டம் துவாவுடன் இனிதே நிறைவுற்றது, இதில் மாவட்ட சகோதரர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.....
No comments:
Post a Comment