மரணம் என்பது துயரம் நிறைந்த ஒன்றே. ஆனால், எந்த ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்! இதை அனைவரும் அறிந்து வைத்திருந்தாலும் ஒரு குடும்பத்தில் ஒரு மரணம் நிகழ்ந்துவிட்டால், அவர்கள் படும் கஷ்டத்தை காணும் போது நாமும் மன வேதனையை அடைய நேரிடுகின்றது.
கடந்த 13.04.2012 அன்று ரியாத் TNTJ- வின் 18ஆவது இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது, காரைக்காலில் இருந்து முஹம்மது கபீர் என்ற சகோதரர் ரியாத் மண்டலச் செயலாளர் சகோ: அரசூர் ஃபாரூக் அவர்களை தொடர்பு கொண்டு, "காரைக்கால் - ஹாஜியார் தெருவைச் சேர்ந்த முஹம்மது யாசீன்" என்பவர் ரியாதில் இன்று காலை இறந்து விட்டார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அவரை ரியாதிலேயே நல்லடக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். தாயகத்தில் "நோட்டரி பப்ளிக்" ஆவணங்களை தயார் செய்ய உடனடியாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மறுநாள் மரணித்தவரின் அண்ணன் ஜெயினுலாபுதீன் மற்றும் சகோ. இஸ்மாயில் ஆகியோருடன் மண்டல செயலாளர் சகோ அரசூர் ஃபாரூக் அவர்கள், சவூதியில் பெறப்பட வேண்டிய அனைத்து ஆவணங்களையும் சேகரித்தார். அல்லாஹ்வின் உதவியால் கடந்த 15.04.2012 ஞாயிறு அன்று லுஹருக்கு பிறகு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்காக சகோ. காரைக்கால் ரஃபீக் மற்றும் சவூதி அப்துல்லாஹ் ஆகியோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். சகோ. யாசீன் பணிபுரிந்து வந்த நிறுவன உரிமையாளர் 27,000 சவூதி ரியால் (3 இலட்சத்து 60 ஆயிரம் இந்திய ரூபாய்கள்) தொகையினை இறந்த யாசீனின் குடும்பத்தாருக்கு தருவதாக வாக்களித்துள்ளார்.
களப்பணி & தவவல்: அரசூர் ஃபாரூக், ரியாதிலிருந்து....
No comments:
Post a Comment