அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் TNTJ வின் "செங்கடலில் ஒரு சங்கமம் II" மற்றும் உம்ரா பயண நிகழ்ச்சி


மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் சார்பாக 30.03.2012 வெள்ளியன்று காலை "செங்கடலில் ஒரு சங்கமம் II" நிகழ்ச்சி ஜெத்தா செங்கடலில் கப்பலில் பயணித்தவாறே மிகச்சிறப்பாக நடைபெற்றது. மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெத்தா மண்டல தலைவர் சகோ. நவ்ஷாத், ரியாத், ஜெத்தா மண்டல நிர்வாகிகள் மற்றும் மக்கா மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுமார் 230 பேர்களுக்கு மேல் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ரியாதினைச் சேர்ந்த ஆண்கள் - பெண்கள் - சிறுவர்கள் பங்கேற்றனர்,

காலை 9 மணிக்கு ஆரம்பித்த கப்பல் பயண நிகழ்ச்சியில், முதலாவதாக தபூக் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள், "(வாழ்க்கைப்) பயணம்" என்ற தலைப்பில் துவக்க உரையாற்றினார். அதனை அடுத்து, ரியாத் மண்டல பேச்சாளர் சகோ. ஹபீழ் மவுலவி அவர்கள் "கடல்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில், கேள்விகளுக்கு பதில் கூறியவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மதியம் சரியாக 12 மணிக்கு நிகழ்ச்சி நிறைவுற்றது. அனைவருக்கும், ஜெத்தா மண்டலம் மூலமாக, ரியாத் மண்டலம் மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சிக்காக கப்பலை எடுப்பதிலும் ஜெத்தா மண்டலம் சிறப்பான உதவி புரிந்தது.

முன்னதாக, ரியாத் மண்டலம் ஏற்பாட்டில், 28.03.2012 புதன் மாலை 3.45 மணிக்கு, ரியாத் ஹாரா பகுதியிலிருந்து 4 பேருந்துகள் மக்காவை நோக்கி உம்ரா நிமித்தமாக புறப்பட்டன. பேருந்து பொறுப்பாளர்கள் சகோ. புதுக்கோட்டை ஃபாரூக், சகோ. ஷேக் அப்துல் காதர், சகோ. ஹாஜா மைதீன், சகோ. அக்பர், சகோ. சலாவுதீன், சகோ. முபாரக், சகோ. அரசூர் ஃபாரூக், சகோ. மோமீன், சகோ. மாஹீன் மற்றும் சகோ. ஃபரீத் ஆகியோர் மிகச்சிறப்பாக பேருந்துகளை வழி நடத்திச் சென்றனர். ஒவ்வொரு பேருந்திலும், சிறப்பு பயான்கள், உம்ரா செயல்முறை விளக்கம், விநாடி விநா நிகழ்ச்சிகள், இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்பெற்றன. பரிசுப் பொருட்களும் வெகுமதியாக வழங்கப்பட்டன. பலரும் சொந்த வாகனங்களிலும் வந்து உம்ரா மற்றும் கப்பல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பேருந்துகளில் ஐயங்களைக் கேட்டு தெளிவு பெறுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வியாழன் காலை சிறப்பான தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, அனைவரும் மன நினைவோடு கபதுல்லாவில் உம்ரா செய்தனர். ரியாத் மண்டலம் சார்பாக புதிதாக இஸ்லாத்தினை ஏற்ற சகோதரர் ஒருவரும், இஸ்லாத்தினை ஏற்றதற்கான ஆவணங்கள் பெறப்பட்டு, இலவசமாக உம்ரா செய்ய அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். தன் வாழ்நாளிலேயே இந்த மூன்று நாட்கள் தான் மிகச்சிறப்பான நாட்கள் என அவர் மனம் நெகிழ்ந்து கூறியது குறிப்பிடத் தக்கது.

மேலும், ரியாத் சித்தீன் கிளை சார்பாக "உம்ரா கையேடு" நோட்டீஸ், ரியாத் ரவ்தா கிளை சார்பாக "பயண துஆக்கள்" நோட்டீஸ் ஆகியவை விநியோகிக்கப்பட்டன. மேலும், ஷிஃபா கிளை சார்பாகவும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. 4 பேருந்துகளில், ஒரு பேருந்து முழுமைக்கும் ஷிஃபா கிளை சார்பாக மக்கள் கலந்து கொண்டனர். மார்க்க விளக்க புத்தகங்கள், ஏகத்துவம் தீன்குலப்பெண்மணி இதழ்கள் அன்பளிப்புகளாக வழங்கப்பட்டன.

கப்பல் பயண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, பேருந்துகள் வெள்ளி காலை 6 மணிக்கு மக்காவிலிருந்து ஜெத்தா புறப்பட்டன. கப்பல் பயண நிகழ்ச்சி முடிந்தவுடன், மீண்டும் ரியாத் நோக்கி புறப்பட்டு அனைவரும் வெள்ளி பின்னிரவு ரியாத் திரும்பினர். சவூதியில் குடும்பத்தோடு தங்கி பணியாற்றுபவர்களும், குடும்பத்தை பிரிந்து வந்து பணியாற்றுவர்கள் என அனைவரும் மன நிறைவோடு தங்கள் இருப்பிடம் திரும்பினர். தொடர்ந்து இம்மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்துமாறு ரியாத் நிர்வாகிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சுற்றுலா போன்ற நிகழ்ச்சியிலும் நேரத்தை இறை நினைவோடு மக்கள் கழித்தது சிறப்பிற்குரியது.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
















ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.