ரவ்தா கிளையில் கடந்த 08-06-2012 அன்று மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி
நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. ஸலாஹுத்தீன் அவர்கள் கிளைப்பணிகளை ஊக்கப்படுத்தி
துவக்கவுரையாற்றினார். அதைத் தொடர்ந்து மண்டலம் சார்பாக “இஸ்லாத்தினை
அறிமுகப்படுத்துவோம்!” எனும் தலைப்பில் சகோ.முஹம்மது மாஹீன் சிறப்புரையாற்றினார்.
‘இஸ்லாத்தை முழுமையாக அறிந்து கொள்ளாத காரணத்தினால் நம்மிடம் ஒற்றுமை, உறுதி,
பொறுமை போன்ற நற்குணங்கள் விலகி சென்று கொண்டிருக்கின்றன. எனவே இஸ்லாத்தை நமக்கு
நாமே மீண்டும் அறிமுகப்படுத்திக் கொள்ளும் காலகட்டத்தில் இருக்கின்றோம். இஸ்லாத்தை
பற்றிய நம்முடைய அறிவை மென்மேலும் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பை நாம் அதிகரித்துக்
கொள்ள வேண்டும்' என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார். மண்டல மற்றும் மாநில
செய்திகள் பரிமாறப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
ரவ்தா கிளை
"இஸ்லாத்தினை அறிமுகப்படுத்துவோம்!" - ரவ்தா கிளை பயான் நிகழ்ச்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment