அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் – லிஃப்ட் விபத்தில் பாதிக்கப்பட்ட மேலப்பாளையம் சகோதரருக்கு மருத்துவ உதவி

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த மெளலவி. ஹபீபுர் ரஹ்மான் தனது ஆலிம் படிப்பை முடித்து விட்டு, ஏழ்மையான குடும்ப சூழ்நிலைக் காரணமாக, ரியாத் வந்து ஒரு சிறு நிறுவனத்தில் லிஃப்ட் டெக்னீஷியனாக பணி புரிந்து வந்த இந்த சகோதரர் - கடந்த மாதம், லிஃப்ட் அறை ஒன்றை லிஃப்டோடு இணைக்கும் பணியில், அறைக்கு மேலே அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தபோது, இணைக்கப்பட்ட கயிறு இணைப்பு அறுந்து, கீழ் தளத்தில் மோதியதால், மேலே அமர்ந்திருந்த அவரது முதுகெலும்பு பகுதியின் குமிழ் எலும்புகள் நொறுங்கி இடுப்புக்குக் கீழே உணர்வற்று போய் விட்டது. அவரது உறவினர்கள் மூலம் உடனடியாக, "நேஷனல் கார்டு மருத்துவமனையில்" அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அவசர சிறப்பு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

தகவல் அறிந்தவுடன் ரியாத் மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் மற்றும் ரியாத் மண்டல செயலாளர் சகோ. ஹாஜா மைதீன் ஆகியோர் மருத்துவமனை சென்று சந்தித்து ஆறுதல் கூறி, தக்க ஆலோசனைகள் கூறினர் . தொடர் சிகிச்சைக்காக பத்தாவில் உள்ள ஷிஃபா அல் ஜஸீரா மருத்துமனையில் தங்கியுள்ள அவரை மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீனும் சந்தித்தார். நிறுவனத்தினரிடமிருந்து ஈடு பெறுதல், மருத்துவ ஆலோசனை முதலானவை வழங்கப்பட்டன.

இன்னும் குணமடையாத காரணத்தால், விரைவில் நாடு திரும்பி சிகிச்சையை தொடர வேண்டியுள்ளதால், அவருடைய மருத்துவ உதவிக்காக ரூ 20,000 மதிப்பிலான சவூதி ரியால்களை ஹபீபுர் ரஹ்மானின் உறவினரினர் வசம், ரியாத் TNTJ மண்டல அணிச் செயலாளர் சகோ. மோமீன் அவர்கள் கடந்த 08.06.2012 அன்று ரியாத் மர்கஸில் வழங்கினார். மேலும், சகோ. ஹபீபுர் ரஹ்மான் மருத்துவமனையில் பயனுள்ள வகையில் நேரத்தை கழிப்பதற்காக, TNTJ அறிஞர்களின் ஆய்வு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.