அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் ஹாரா பகுதியில் புதிய இடத்தில் பிரச்சார நிகழ்ச்சி 14-05-2012

கத்துவ பிரச்சாரம் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் எனும் நோக்கில், ரியாத் ஹாரா (டெலிமனி) பகுதியில்  கடந்த 14-05-2012 திங்கள் அன்று புதிய இடத்தில் தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இஷா தொழுகைக்கு பின் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ரியாத் மண்டல பேச்சாளர் சகோ. சோழபுரம் அன்சாரி அவர்கள்,  ‘குர்ஆனை விளங்கி பின்பற்றுவோம்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

ஒழுக்க வாழ்வே இம்மையிலும், மறுமையிலும்  சிறப்புகளைப்  பெற்றுத்  தரும். அதற்கு குர்ஆனையும் ஹதீஸையும்  நாம் தினந்தோறும் படித்து   விளங்கி ஆய்வு செய்து நமது வாழ்வின் அனைத்து விசயங்களையும் அதனடிப்படையில் அமைத்துக் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் சகோ. அன்சாரி உரை நிகழ்த்தினார்.

அதனையடுத்து, கலந்து கொண்ட புதிய சகோதரர்களுக்கு மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத், TNTJ வின் பணிகளை விளக்கினார்.  இதில் அப்பகுதி சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.