அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“பாவ மன்னிப்பு" - கதீம் செனையா கிளை பயான் நிகழ்ச்சி

டந்த 24-05-12 அன்று கதீம் செனையா கிளையில் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள், ‘பாவமன்னிப்பு’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தவறு செய்த மனிதன் திருந்திய போதும் நான் செய்த தவறுகளை இறைவன் மன்னிக்கவே மாட்டான் என விரக்தி அடைந்து தொடர்ந்து தவறுகளை செய்து கொண்டே இருக்கின்றான். ஆனால் கருணையாளன் இறைவனோ மனிதர்கள் அனைவரும் தவறு செய்பவர்களே! அவர்கள் என்னிடத்தில் பாவமன்னிப்பு கேட்டால் நான் வழங்க தயாராக இருக்கிறேன் என்று கூறுகிறான், மேலும் அவ்வாறு பாவமன்னிப்பு கேட்பவர்களை அவன் விரும்பவும் செய்கின்றான்’ என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
அதை தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட உரையிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதிலளித்த மூவருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. அடுத்ததாக சகோ.முஹம்மது மாஹீன், தவ்ஹீத் ஜமாஅத் மூலம் நடத்தப்பட்ட கிறிஸ்தவ விவாதங்கள் மற்றும் இலங்கையில் தப்லீக் ஜமாஅத்துடன் நடந்த விவாதங்கள் பற்றி விளக்கி கூறினார். அவர் மண்டல செய்திகளை தெரிவித்த பின் கிளை தலைவர் சகோ.நவ்ஷாத் அவர்கள், கல்யாண வீடுகளில் எடுக்கப்பட்ட வீடியோவின் விபரீதங்கள் பற்றி விழிப்புணர்வு உரையாற்றினார். பின்னர் அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.
மேலும் கதீம் செனையா கிளையில் ஹதீஸ்களை மனனம் செய்வதற்காக 24-05-12 அன்று ‘தேர்ந்தெடுக்கப்பட்ட 50 நபிமொழிகள்’ என்ற 20 புத்தகங்கள் வழங்கப்பட்டன.
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.