அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் ஷிஃபா கிளை சார்பாக ஆன்லைன் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி


ரியாத் மண்டலத்தின் ஷிஃபா கிளையின் சார்பாக கடந்த 04.05.2012 வெள்ளியன்று மதியம் சிறப்பு கல்வி விழிப்புணர்வு முகாம் ஆன்லைன் நிகழ்ச்சி நடைபெற்றது. தாயகத்திலிருந்து சகோ. சித்திக் M.Tech அவர்கள், "எங்கு படிக்கலம்? என்ன படிக்கலாம்?" என்ற தலைப்பில் கல்வி விழிப்புணர்வு சிறப்புரை நிகழ்த்தினார். கல்வி, வேலைவாய்ப்பு, உயர்கல்வி முதலான சந்தேகங்களுக்கு சகோ. சித்திக் சிறப்பாக விளக்கமளித்தார்.

ஷிஃபா கிளை நிர்வாகி சகோ. ஜியாவுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதிக அளவில் சகோதரர்கள் கலந்து கொண்டனர். மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் மண்டல செய்திகளை விளக்கினார். மேலும், மண்டல பொறுப்புச் செயலாளர் சகோ. மோமீன் அவர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது விழிப்புணர்வுடன் தகவல்களை கொடுக்க வேண்டி அறிவுறுத்தினார். இது தொடர்பான மாநிலத் தலைமையின் அறிக்கையும் நோட்டீஸ்களாக விநியோகிக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதியில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.