அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"அல்லாஹ்வை நம்புவது எப்படி?" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி


ரியாத் மண்டல மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி 27-04-2012 வெள்ளியன்று இஷாவுக்கு பிறகு நடைபெற்றது. மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. செய்யது அலி மவுலவி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மண்டல பொருளாளரும், மண்டல பேச்சாளருமான சகோ.ஃபரீத் 'அல்லாஹ்வை நம்புவது எப்படி?' என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்.

உலக மக்கள் இறைவனைக் குறித்து கொண்டுள்ள பல்வேறு விதமான நம்பிக்கைகளான

1. கடவுள் இல்லை
2. பல கடவுள் உண்டு
3. கடவுளுடைய பண்புகளை மனிதர்களுக்கு வழங்குதல்
4. மனிதனுடைய பண்புகளை கடவுளுக்கு வழங்குதல்

போன்றவைகளை பட்டியலிட்ட அவர் ஒவ்வொரு கொள்கையிலும் உள்ள விபரீதங்களை எடுத்துக்கூறியதுடன் இஸ்லாம் எந்த விதத்தில் இறைவனை நம்பச்சொல்கிறது என்பதையும் விவரித்தார்.

அதனைத் தொடர்ந்து சகோ. செய்யது அலி மவுலவி இஸ்லாம் கூறிய படி இறைவனை நம்பாதவர்கள் கால்நடைகளுக்கு ஒப்பாவர் என்ற திருக்குர்ஆன் வசனத்திற்கு விளக்கமளித்தார்.

இறுதியாக மண்டல செயலாளர் சகோ. கதிரை ஹாஜா அவர்கள் மாநிலத் தலைமை மற்றும் மண்டல செய்திகளை எடுத்துரைக்க கூட்டம் இனிதே துஆவுடன் நிறைவுற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.