அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

இலங்கை - தம்புள்ள பள்ளி சேதப்படுத்தியதற்கு எதிராக ரியாதில் கண்டன உரை

லங்கை தம்புள்ள நகரிலுள்ள ஹைரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலை சேதப்படுத்தி அதை இன்னொரு அயோத்தியாக மாற்றிய புத்த பிக்குகளை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலத்தில் கண்டன உரை நிகழ்த்தப்பட்டது. 11-05-2012 வெள்ளிக்கிழமையன்று ரியாத் மண்டல தலைமையகமான பத்தா மர்கஸில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் புத்த பிக்குகளின் இத்தகைய அராஜகத்தை கண்டித்தும் அதற்கு இசைந்து கொடுக்கும் இலங்கை அரசை கண்டித்தும் சகோ.முஹம்மது மாஹீன் கண்டன உரை நிகழ்த்தினார்.
அல்லாஹ்வின் ஒளியை தங்களுடைய வாயினால் ஊதி அணைத்து விடலாம் என எண்ணுகின்றனர், ஆனால் மறுப்போர் வெறுத்தபோதும் அல்லாஹ் தன் ஒளியை நிலைநாட்டியே தீருவான் என்ற திருக்குரான் வசனத்தை சுட்டிக்காட்டிய அவர், எங்கெல்லாம் இஸ்லாத்திற்கு எதிராக வன்முறை தூவிவிடப்படுகிறதோ அங்கெல்லாம் இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டு கொண்டிருப்பதை நமக்கு வரலாறு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. அதுபோலவே இலங்கையிலும் மாபெரும் இஸ்லாமிய எழுச்சி ஏற்பட இருப்பதற்கான அறிகுறி தான் இது’ என்று குறிப்பிட்டார்.
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.