ரியாத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 04.05.2012 வெள்ளியன்று மாலை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, பொறுப்பாளர் சகோ. திருமங்கலக்குடி சலாஹுத்தீன் தலைமையில் ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. சகோ. ஹாஜா அவர்கள் செயல்பாடுகளை விளக்கினார். மாவட்ட வளர்ச்சிக்கான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கடித தொடர்பு, தெருமுனை பிரச்சாரம், பெண்கள் பயான், நோட்டீஸ் விநியோகம், பள்ளிவாசல் கட்டட பணி – அதற்கான செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆவணியாபுரம் சகோ. மஹ்பூப் ஜான், பொறுப்பாளர்களுள் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரியாத் வாழ் தஞ்சை வடக்கு மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
தஞ்சை வடக்கு அமைப்பு
ரியாத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் கூட்டம் - மே 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment