ரியாதில் பணிபுரிபவரும், சில மாதங்களுக்கு முன்பாக இஸ்லாத்தை ஏற்றவருமான சக்திவேல் என்ற சகோ. அப்துல் ரஹ்மான் அவர்களின் குழந்தையின் அவசர கிட்னி சிகிச்சைக்காக தாயகம் செல்ல வேண்டி இருந்ததால், தாயகம் செல்வதற்காக உதவி புரியுமாறு கேட்டுக் கொண்டார். அதனை அடுத்து நல்லுள்ளம் கொண்ட சகோதரர்களின் உதவியின் அடிப்படையில், ரியாத் மண்டலத்தின் சார்பாக ரூ 13,500 மதிப்புள்ள சவூதி ரியால்கள் அவருக்கு 08.05.2012 அன்று வழங்கப்பட்டன. மண்டல மருத்துவ அணி செயலாளர் சகோ. மாஹீன் அவர்கள் தொகையை வழங்கினார். அதை நெகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட அவர் தான் உடனடியாக தாயகம் புறப்பட இருப்பதாகவும் தனது குழந்தையின் பூரண நலம் பெற துஆ செய்யுமாறும் தெரிவித்தார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
உதவி
மனிதநேயம்
ரியாத் மண்டலம்
விமான டிக்கட் உதவி
ரியாத் - தாயகம் செல்ல விமான டிக்கட் & மருத்துவ உதவி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment