ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளைக்கு உட்பட்ட அரேபியன் கல்ஃப் கேம்பில் கடந்த 23-05-2012 புதன் அன்று மாதாந்திர மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் ஏனங்குடி சகோ.அலாவுதீன் அவர்கள் கூட்டத்தை துவக்கி வைத்து சிற்றுரையாற்றினார். அதை தொடர்ந்து மண்டலம் சார்பாக மண்டல பேச்சாளரும், மருத்துவ அணி செயலாளருமான சகோ.முஹம்மது மாஹீன், ‘நீண்ட ஆயுளை பெற..’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். நீண்ட ஆயுளை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. அதற்காக எத்தனை லட்சங்களையும் கொடுக்க நம்மில் எத்தனையோ பேர் தயாராக இருக்கின்றனர். அதுபோலவே செல்வத்தை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. செல்வத்திற்காகத்தான் கொலை, கொள்ளை, லஞ்சம், ஊழல் போன்றவை நடக்கின்றன. அதிர்ஷ்டக் கல், லாட்டரி டிக்கெட் என்று செல்வத்தை பெருக்கி கொள்ள ஒவ்வொருவரும் நினைக்கின்றனர். நபி(ஸல்) அவர்கள், ''ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்'' என்று சொன்னதன் ரகசியத்தை புரியாமல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உறவினர்களை பேணி வாழும் போது இவ்வாறு இறைவன் உலகிலேயே நன்மையை தருகின்றான்’ என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார். மலஸ் கிளை நிர்வாகி சகோ. காஜா அவர்களின் முன்னிலையில் கிளை மேம்பாட்டிற்கான ஆலோசனைகளுடன் கூட்டம் நிறைவுற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
அரேபியன் கல்ப்
கிளை நிகழ்ச்சி
மலஸ் கிளை
‘நீண்ட ஆயுளை பெற...’: மலஸ் கிளை அரேபியன் கல்ஃப் கேம்பில் சொற்பொழிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment