அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“கடன் பெற்றவரின் பொறுப்புகள்” ஜரீர் பள்ளியில் மலஸ் கிளை பயான்

ரியாத்  TNTJ  மலஸ் கிளையின் மாதாந்திர பயான் ஜரீர் பள்ளியில் கடந்த 22.05.2012 செவ்வாயன்று இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. ஏனங்குடி அலாவுதீன் தலைமை தாங்கி துவக்க உரையாற்றினார். அடுத்து “கடன் பெற்றவரின் பொறுப்புகள்” என்ற தலைப்பில் மண்டல பேச்சாளரும், மண்டல பொருளாளருமான  சகோ. ஃபரீத் உரையாற்றினார். கடனை இயன்றவரை தவிர்த்து வாழ்வது எப்படி, நெருக்கடியால் கடன் வாங்க நேரிட்டால் அதை எவ்வாறு திருப்பி செலுத்துவது, கடன் கொடுத்தவரிடம் எவ்வாறு நடந்து கொள்வது, கடனை வாங்கிவிட்டு இழுத்தடிக்கலாமா? அழகிய முறையில் கடனை திருப்பி செலுத்துதல் என்றால் என்ன? கடனை திருப்பி செலுத்தாமல் இறந்துவிட்டால் மறுமையில் அவரின் நிலையென்ன? பெற்றோரின் கடன்களுக்கு பிள்ளைகள் பொறுப்பு என்ன? உள்ளிட்ட பல்வேறு செய்திகளை ஆதாரப்பூர்வ நபிமொழிகளின் அடிப்படையில் விளக்கினார்.
அதனைத்தொடர்ந்து மண்டல செயலாளர் சகோ. கதிரை ஹாஜா மண்டல மாநில செயல்பாடுகளை எடுத்துரைத்தார். கேள்விகள் கேட்கப்பட்டு பதிலளித்தவர்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டு துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.