அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“கடவுளை நம்பாதவன் காட்டுமிராண்டி”- ஒலைய்யா கிளையில் பயான்


ரியாத் மண்டலத்தின் ஒலைய்யா கிளையில் கடந்த 20-06-2012 அன்று மாதாந்திர மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

கிளைச் செயலாளர் சகோ.அயூப் அவர்கள் கூட்டத்தை துவக்கி வைத்து கிளை தகவல்களை தெரிவித்தார். அதை தொடர்ந்து மண்டலம் சார்பாக சகோ.முஹம்மது மாஹீன், ‘கடவுளை நம்பாதவன் காட்டுமிராண்டி’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் ‘கடவுளையும் மறுமை வாழ்க்கையையும் நம்புகிறவன் ஒழுக்கத்துடனும் நாணயத்துடனும் நடக்கின்றான். ஆனால் கடவுளை நம்பாதவனோ அனைத்தும் இவ்வுலகத்துடன் நின்றுவிடுவதாக நம்புவதால் தவறுகள் செய்ய பயப்படாமல் கொலை, கற்பழிப்பு, திருட்டு, ஒழுக்கக்கேடு போன்ற செயல்களில் ஈடுபட்டு காட்டுமிராண்டித்தனமாக வாழ்கின்றான்’ என்று குறிப்பிட்டு விட்டு இறைவனை எவ்வாறு அறிவது என்பது பற்றியும் விளக்கினார்.

பின்னர் மண்டல மற்றும் தலைமை செய்திகள் விளக்கப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.