அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் - 2 யூனிட் அவசர இரத்த தான உதவி 08-10-2011

ரியாதில் பணி புரிபவர் இலங்கையைச் சேர்ந்த சகோ. முஹமத் நிஸ்தார். இவர் தனது மனைவியோடு ரியாதில் வசித்து வருகிறார். இவரது மனைவி பிரசவத்திற்காக ரியாத் சுமைசி மருத்துவமனையில் (கிங் சவுத் மருத்துவமனை) அனுமதிக்கப்பட்டிருந்தார். உடனடியாக குழந்தை பிறப்பு அறுவை சிகிச்சை செய்ய இரத்தம் தேவைப்பட்டதால், தனது நண்பர் மூலம் டி.என்.டி.ஜே ரியாத் மண்டலத்தை அணுகினார். மண்டல மருத்துவ அணி செயலாளர் சகோ. புதுக்கோட்டை ஃபாரூக் ஏற்பாட்டில், உடனடியாக, 08.10.2011 அன்று காலை 10.30 மணிக்கு மண்டல செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் சென்று அவசர இரத்த தானம் செய்தார். மாலை 4 மணிக்கு அந்த சகோதரி அழகானதொரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். முஹமத் நிஸ்தார் நமது ஜமாஅத் பணியை நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டு, எங்கள் முன்னோர்கள் விளங்காமல் இரத்தம் கொடுக்கக் கூடாது என்று கூறியதால் நாங்கள் யாருக்கும் இரத்ததானம் செய்ததில்லை, என் மனைவிக்குத் இரத்தம் தேவை என்றபோதுதான் எனது முன்னோர்களின் அறியாமையை உணருகிறேன் என்று கூறி, தனது மொபைல் எண்ணை தந்து இனி நீங்கள் நடத்தும் இரத்த தான முகாமிற்கு என்னையும் அழைக்க வேண்டும் என்று கூறி பெயரினை பதிவு செய்து கொண்டார். அவரும் இரத்த தானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.