அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் மண்டலத்தில் ஹஜ் செய்முறை விளக்க பயிற்சி 07-10-2011


மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ரியாத் மண்டலத்தின் ஷிஃபா கிளையின் சார்பாக கடந்த 07.10.2011 வெள்ளி அன்று ஜும்ஆவுக்குப் பிறகு "ஹஜ் செய்முறை விளக்கம்" நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மண்டல பொறுப்பாளர்களுள் ஒருவரான சகோ. ஷிஃபா மோமீன் அவர்கள் துவக்க உரை ஆற்றினார்.

"புனித கஃபாவின் மாதிரி" சிறப்பாக செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும், ஹஜ் கிரியைகளின் முக்கிய நிகழ்வுகளான, அரஃபா பெருவெளி, 5 அடுக்கு பாலங்களில் மினாவில் கல்லெறிதல், கஃபத்துல்லாவை வலம் வருதல், புனித கிரியை நடக்கும் இடங்களின் மேப், மக்கள் போக்குவரத்து வழிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டு, அதன் முக்கியத்துவங்கள் எளிமையாகவும், நடைமுறைகளுக்கேற்றார் போலும் விளக்கப்பட்டன. மண்டலப் பேச்சாளர் சகோ. ஹபீழ் மவுலவி அவர்கள் செய்முறை விளக்கத்தோடு உரையாற்றினார். சுமார் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விளக்கம் பெற்றனர்.

மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் செயல்பாடுகளை விளக்கினார்.

ஷிஃபா கிளை நிர்வாகிகள் சிறப்பாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அனைவருக்கும் சிறப்பு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.