அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ஹஜ் பயணிகளுக்காக ரியாதில் மாபெரும் இரத்த தான முகாம்! 135 லிட்டர் இரத்தம் தானம்! 21-10-2011

ரத்த தானங்கள் செய்து உயிர்களைக் காப்பதில் தொடர்ந்து  நான்கு வருடங்களாக தமிழகத்தில் முதலிடத்தில் இருந்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பல கேடயங்களையும் பாராட்டுக்களையும் பெற்றதை அனைவரும் அறிவர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்த இரத்ததான சேவையை அது செய்து வருகின்றது.  தற்போது உலகம் முழுவதிலிருந்து முஸ்லிம்கள் ஹஜ் செய்வதற்காக மக்கா நகருக்கு வந்திருப்பதால்  அவர்களில் தேவைப்படுவோருக்கு அவசர காலத்தில் வழங்குவதற்காக ஒரு முகாமை ஏற்பாடு செய்ய வேண்டுமென கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையினர் (KFMC) ரியாத் TNTJ-விடம் வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்ற ரியாத் TNTJ, கடந்த 21.10.2011 வெள்ளிக்கிழமையன்று மாபெரும் 13 ஆவது இரத்த தான முகாமை நடத்தியது. இது ஹஜ் பயணிகளுக்காக தொடர்ச்சியாக நடத்தப்பெறும் 5 ஆவது முகாம் ஆகும்.
 
 இந்த (13 வது) முகாமில் 308 நபர்கள் இரத்ததானம் 

இந்த முகாமில் 375 க்கும் மேற்பட்ட சகோதர-சகோதரிகள் கலந்து கொண்டனர். காலை  9.30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்ட முகாமில், மக்கள் கூட்டம் அலை மோதியதால், காலை 9 மணிக்கே துவங்கியது. இம்முகாமில் பெண்கள் உட்பட 308 பேரிடம் மட்டும் இரத்தம் பெறப்பட்டது. இரத்த அழுத்தம் அதிகம், ஹீமோகுளோபின் குறைவு, ஹஜ்ஜுக்கான தடுப்பூசி  போன்ற காரணங்களுக்காக பல சகோதரர்களால் இரத்தம் வழங்க முடியவில்லை. மாலை 5 மணிக்கு பிறகும் கொடையாளிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்த நிலையில், மருத்துவமனை அதிகாரிகளிடம் பேசி ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. காலையிலிருந்து தொடர்ச்சியாக பணியாற்றும் இரத்த வங்கி ஊழியர்கள் களைப்புற்ற காரணத்தால், இத்துடன் முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள மாலை 6 மணியோடு இரத்த தானம் நிறுத்திக் கொள்ளப்பட்டது. 135 லிட்டருக்கும் அதிகமாக இரத்தம் பெறப்பட்டது இதுவே முதல் முறை.

மருத்துவமனை அதிகாரிகள் குருதிக் கொடையளித்தவர்களுக்கும் ரியாத் TNTJ - யினருக்கும் நன்றி தெரிவித்தனர். ரியாத் மண்டலத்தின் மருத்துவ அணி செயலாளர் சகோ. புதுக்கோட்டை ஃபாரூக் மற்றும் மண்டல நிர்வாகிகளின் ஏற்பாட்டில், சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  தொண்டர் அணியினர்,  கிளை  நிர்வாகிகள், உறுப்பினர்களின் கடுமையான உழைப்பும் ஒத்துழைப்பும் இம்முகாம் சிறப்புடன் நடைபெற முக்கிய காரணமாகும். மண்டல/கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்றி  சுமார் 20 வாகனங்களில் கொடையாளிகளை முகாமுக்கு அழைத்து வந்திருந்தனர்.

இரத்தம் வழங்கும் கொடையாளிகள், முந்தைய இரவு நன்றாக குறைந்தது 5-6 மணி நேரமாவது உறங்கியிருக்க வேண்டும் என்றும், அதிகமான திரவ உணவுகளை சாப்பிட்டிருக்க வேண்டும் எனவும் கொடையாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முஸ்லிமல்லாத தமிழ் சகோதரர்களும் கலந்து கொண்டு, TNTJவின் பணியை பாராட்டி, தொண்டரணியிலும், வாகன சேவையிலும்  தங்களையும் ஈடுபடுத்திக் கொண்டனர்.

 
நேரமின்மையால் இதில் சுமார் 25 பேருக்கும் மேல் இரத்தம் கொடுக்க முடியாமல் சென்றனர். தமிழர்கள் மட்டுமன்றி பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட ஆந்திரா, கேரளா, கர்நாடகா, கஷ்மீர், உ.பி., பஷிம் பங்கா (மேற்கு வங்காளம்) மற்றும் இதர மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இதில் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.

ரியாத் மண்டலம் தொடர்ச்சியாக KFMC -யில் முகாம்கள் நடத்துவதால், மருத்துவமனை அதிகாரிகளே ரியாத் TNTJ பெயரில் பேனர்கள் தயாரித்து மருத்துவமனையில் பல இடங்களில் வைத்திருந்தனர். மேலும், புது முயற்சியாக KFMC மருத்துவமனையோடு இணைந்து ரியாத் ஒலைய்யா கிளை சார்பாக, 22.10.2011 சனி முதல் 26.10.2011 புதன் வரை தொடர் மொபைல் இரத்த தான முகாமும் தற்போது ஒலைய்யா பகுதியில் நடைபெற்று  வருவது குறிப்பிடத்தக்கது.

 
வெளிநாடுகளிலேயே ஒரே முகாமில் அதிகமாக இரத்த தானம் செய்த மண்டலம் என்ற இடத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 









ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.