அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் ஒலைய்யா கிளையில் தொடர் மொபைல் இரத்த தான முகாம்


டந்த 21.10.2011 வெள்ளியன்று நடைபெற்ற மாபெரும் 13 ஆவது இரத்த தான முகாமில் 308 பேர் இரத்த தானம் செய்தது அறிந்ததே! அதனைத் தொடர்ந்து, ஹஜ் பயணிகளுக்கான மீண்டும் ஓர் இரத்த தான முகாம் ரியாத் மண்டலத்தின் ஒலைய்யா கிளை சார்பாக அக்டோபர் 22 முதல் 26 வரை, காலை 8.30 மணி முதல் மதியம் 2 மணி வரை தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு நடைபெற்றது. இது தொடர் மொபைல் இரத்த தான முகாம் ஆகும். ஒலைய்யா கிளைச் செயலாளர் சகோ. அய்யூப் அவர்களின் சீரிய முயற்சியில், அல்ஃபைஸலியா – அல்கொஸாமா ஹோட்டல்ஸ் குழும வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முகாமில் சுமார் 140 பேர்களுக்கு மேல் கலந்து கொண்டு, 104 பேர் இரத்த தானம் செய்தனர்.

கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையின் (KFMC) மொபைல் இரத்த வங்கி வாகனத்தில் நடைபெற்ற இம்முகாம், ரியாத் மண்டலத்தின் புதிய முயற்சிகளில் ஒன்றாகும். வார ஓய்வு நாளில் மருத்துவமனைக்கு  கொடையாளிகளை  அழைத்து வந்து முகாம்கள் நடத்துவது போன்று, வேலை நாட்களிலேயே நிறுவனத்திடம் அனுமதி பெற்று, நிறுவனத்தின் அருகிலேயே வாகனத்தை கொண்டு வந்து இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரியாத் மண்டலத்தின் இந்த 14 ஆவது முகாம் நடத்துவதற்கான முயற்சிக்கு அல்ஃபைஸலியா – அல்கொஸாமா நிறுவனத்தில் மனித வளத்துறை (HR Department) – யில் பணி புரியும் இலங்கையைச் சேர்ந்த சகோ. ஷரத் மற்றும் அதிகாரிகள் சிறந்த முறையில் ஒத்துழைப்பு நல்கினர். இம்முகாமில், இலங்கை, ஃபிலிப்பைன்ஸ், சவூதி, பங்களாதேஷ், சூடான் நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட ஒலைய்யா கிளை உறுப்பினர்கள் இரத்த தானம் செய்தனர்.

இதனை அடுத்து, 2010 - ஐப் போன்றே, வெளிநாட்டு மண்டலங்களிலேயே 2011 ஆண்டில் அதிகம்  இரத்த தானம் செய்த மண்டலம் என்ற இடத்தை ரியாத் மண்டலம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.